வாட்ஸ்-ஆப் கோப்புப்படம்
டெக்

இந்த செல்போன்களில் ஜனவரியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது!

பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

PT WEB

பழைய ஆன்ட்ராய்டு ஓஎஸ் உள்ள சில செல்போன்களில் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து வாட்ஸ்-ஆப் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்கேட் ஓஎஸ் மற்றும் பழைய வெர்ஷன்கள் உள்ள செல்போன்களில் பாதுகாப்பு மற்றும் புதிய அப்டேட்களை சரியாக செயல்படுத்த முடியாது என்பதால் வாட்ஸ்-ஆப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால் சாம்சங் செல்போன் மாடல்களான Galaxy S3, Galaxy Note 2, Galaxy Ace 3, Galaxy S4 Mini மற்றும் மோடரோலா Moto G 1st Gen ஆகிய மாடல்களில் வாட்ஸ்-ஆப் செயல்படாது. அதேபோல் ஹச்டிசி, எல்.ஜி., சோனி செல்போன்களில் உள்ள சில மாடல்களிலும் வாட்ஸ் ஆப் செயலி செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.