வாட்ஸ்அப் செயலி தனது வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சாட்டுக்கு தனி வால்பேப்பர் வைத்துக்கொள்ளக்கூடிய புதிய அப்டேட்டை பரிசோதித்து வருகிறது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. இதனால் தனது பெரும் பயன்பாட்டாளர்களை வெளியேறாமல் தடுக்கவும், புதிய பயன்பாட்டாளர்களை ஈர்க்கவும் வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகின்றது. அட்வான்ஸ் சர்ஜ் ஆப்ஷன், ஸ்டோரேஜ் பயன்பாட்டில் மேம்பாடு, புதிய ஸ்டிக்கர்கள், அனிமேஷன்கள், புதிய ஐகான்கள் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகின்றன.
இதற்கிடையே புதிய வால்பேப்பர் அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தற்போது வாட்ஸ்அப் பீட்டா பயன்பாட்டு சோதனையில் இருக்கும் அந்த அப்டேட்டின் மூலம், பயன்பாட்டாளர்கள் தங்கள் ஒவ்வொரு தனிப்பட்ட 'சாட்'க்கும் (chat) தனித்தனியே வால்பேப்பரை வைத்துக்கொள்ள முடியும். அத்துடன் கேலரியில் இருக்கும் புகைப்படங்களையும் தனித்தனியாக மாற்றிக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி டார்க் மோட் அல்லது லைட் மோட் என்று ஒவ்வொரு சாட்டுக்கும் தனித்தனியே வைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.