டெக்

வந்துவிட்டது வாட்ஸ்அப் டார்க் மோட்!

webteam

டார்க் மோட் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்ஸ்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை 2020-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கிக் கொண்டு வருகிறது. அதன்படி, டார்க் மோட் வசதியை பீட்டா பயன்பாட்டாளர்களுக்கு தற்போது வாட்ஸ்அப் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ்அப் அப்டேட்டில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக் மெசஞ்சர், அமேசான் கிண்டில் போன்ற ஆப்கள் ஏற்கெனவே டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்திவிட்ட நிலையில் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் இன்னும் அந்த வசதியை அறிமுகம் செய்யவில்லை. அதேசமயம் விரைவில் டார்க் மோட் வசதி அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்அப் தெரிவித்திருந்த நிலையில் சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோடை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

உங்களது வாட்ஸ்அப் செயலியில் WhatsApp Settings > Chats > Theme > Dark சென்று டார்க்மோட் வசதியைப் பெறலாம். தற்போது பீட்டா வெர்ஷனுக்கு மட்டுமே வந்துள்ளதாகவும் கூடிய விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் அறிமுகமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.