டெக்

ஃபேஸ்புக் போல வாட்ஸ்-அப்பில் வருகிறது புதிய வசதி

JustinDurai

வாட்ஸ்-அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப்போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

உலக அளவில் தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவும் முதன்மையான செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. வெறும் குறுஞ்செய்தி மட்டுமின்றி, வீடியோ, வாய்ஸ், டெக்ஸ்ட் மெசேஜ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் தனிநபர் மட்டுமல்லாது குழுவிலும் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் வசதிகள் உள்ளதால் வாட்ஸ்அப்பை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியில், ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. வாட்ஸ்-அப் செயலி மேம்படுத்துப்படுவது தொடர்பான தகவல்களை அறிய உதவம் பீட்டா இணையதளத்தில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த புதிய வசதியின் மூலம், நாம் புரொஃபைல் போட்டோவுடன், இனி கவர் போட்டோ ஒன்றையும் கூடுதலாக சேர்க்கலாம். முதற்கட்டமாக, இந்த வசதி வாட்ஸ்-அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகமாகவிருக்கிறது.

இதையும் படிக்க: ராகுல்காந்தி மீது ஆயிரக்கணக்கான புகார்களை அளித்த அசாம் பாஜக