டெக்

வாட்ஸ்-அப்பில் இருந்து நீக்கப்பட்ட ‘Vacation Mode’ வசதி..!

JustinDurai
வாட்ஸ்-அப் செயலியில் பல மாதங்களாக டெவலப்மெண்டில் இருந்த ‘Vacation Mode’ வசதி நீக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களில் நீங்கள் வாட்ஸ்அப் அப்டேட் செய்தீர்கள் என்றால் ‘Vacation’ எனப்படும் அம்சம் சோதிக்கப்படுவதை பார்த்திருக்கலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் பயன்பாட்டுக்கான இந்த அம்சம் 2018 முதல் டெவலப்மெண்ட்டில் இருந்து வருகிறது.
 
 
இதன்படி ஒருவரின் சாட்டை ஆர்ச்சிவ் செய்து வைத்தால், வாட்ஸப்பில் இருந்து மறைந்துவிடும். ஆனால், மீண்டும் அந்த நபர் உங்களுக்கு மெசேஜ் செய்தால் அந்த சாட், ஆர்ச்சிவில் இருந்து வெளியே வந்துவிடும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க, வெக்கேஷன் மோடை ஆன் செய்துவிட்டால், ஆர்ச்சிவில் இருக்கும் நபர்களின் மெசேஜ்கள் தொடர்ந்து ஆர்ச்சிவ்லேயே சேமிக்கப்படும்.
 
இந்நிலையில் வெக்கேஷன் மோட் வசதியை அறிமுகப்படுத்திய WABetaInfo தளம் தற்போது, அந்த வசதியை முற்றிலுமாக நீக்கிவிட்டதாக தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக சோதனை முறையில் இயங்கிவந்த வெக்கேஷன் மோட் இனி வாட்ஸ்-அப்பில் செயல்படாது என கூறியுள்ளது.