டெக்

பணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்!

பணம் அனுப்பும் வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்!

webteam

பணம் அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும் என்பதால் இந்தச் செயலி, பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

அத்துடன் வாட்ஸ் அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கிய பின்னர் மேலும் பல மாற்றங்களும், அப்டேட்களும் வாட்ஸ்அப்-ல் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் தகவல் பரிமாற்றத்துக்கு அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி தற்போது பண பரிமாற்றத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் தற்போது பிரேசிலில் மட்டுமே இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பண பரிமாற்றத்துக்கு கூகுள்பே, போன்பே போன்ற செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் விரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியும் அறிமுகமாகும் என தெரிகிறது.

பிரேசிலில் அதிகாரப்பூர்வமாக வாட்ஸ்அப் பணம் அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. வங்கிக் கணக்கை வாட்ஸ்அப்புடன் இணைத்து அதன் பின்னர் அதன் மூலம் பணத்தை செலுத்தும் வழக்கமான வசதியில் உருவாக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பபை உறுதிப்படுத்தும் விதத்தில் 6 இலக்க பாஸ்வேர்ட், கைரேகை ஆகியவையும் வாட்ஸ் அல் பணபரிவர்த்தனையில் அறிமுகமாகியுள்ளது.