டெக்

நவம்பர் 12-க்குள் வாட்ஸ் அப் தகவல்களை பேக் பண்ணுங்க..!

நவம்பர் 12-க்குள் வாட்ஸ் அப் தகவல்களை பேக் பண்ணுங்க..!

webteam

கூகுள் நிறுவனத்துடன் வாட்ஸ்‌அப் நிறுவ‌னம் செய்து கொண்ட‌ ஒப்பந்தத்தின் ‌அடிப்படையில் கூகுள் ட்ரைவில் வாட்ஸ் அப் தகவல்‌களை எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது‌.

போன் தொலைந்து விட்டாலோ, புது போன் வாங்கினாலோ பழைய‌‌ போனுடன் சேர்ந்து பழைய நினைவுகளும் அழிந்துவிடும். இதனால் எத்தனையோ பழைய நினைவுகளையும், எப்போதும் நினைவில் நிற்க‌க்கூடிய மறக்க முடியாத பல உரையாடல்களையும், புகைப்படங்களையும், போன் எண்களையும் சேர்த்து இழக்க நேர்ந்து விடும்.

போனின் மெமரியை மிச்சப்படுத்தவும், போன் ஹேங் ஆவதில் இருந்து விடுபடவும், அளவில்லாத தகவல்களை‌ சேமிக்க கூகுள் ட்ரைவில் புதி‌ய வசதி கொண்டு வரப்‌பட்டுள்ளது.‌ பொதுவாக கூகுள் ட்ரைவில் 15 ஜிபி அளவு வரையில்தான் தக‌வல்களை இலவசமாக சேமிக்க முடியும்‌. அதற்குமேல் சேமிக்க வேண்டுமானால் கட்டணம் செலுத்த வேண்டும்.‌ அதற்கு வாட்ஸ் அப்புக்கு மட்டும் விதி விலக்கு அளிக்‌கப்பட்டுள்ளது. இதன்படி, வாட்ஸ் அப்‌ தகவல்களை மட்டும் கூகுள் ட்ரைவில் எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்கலாம் என கூகுள்‌‌ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் போன் காணாமல் போனாலோ, புதிய போன் வாங்கினாலோ வாட்ஸ்அப் பேக் அப் கூகுள் ட்ரைவில் பாதுகாப்பாக இருக்கும்.

கூகுள்‌ ட்ரைவில்‌ ஓராண்டுக்கு முன்னதாக பேக் அப் செய்திருந்தால் நவம்பர் 12 ஆம் தேதிக்குள் மீண்டும் பேக் ஆப் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பழைய தகவல்கள் தானாக அழிந்துவிடும் என வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்‌கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன்மூலம் புது‌போனில் வாட்ஸ் அப் செயலியை டவுன்லோடு செய்யும்போது பழைய போனில் இருந்த அனைத்து தகவல்களும் அழியாமல் அப்படியே இருக்கும்.

கூகுள் ட்ரைவுடன் வாட்ஸ் அப்பை இணைக்க வாட்ஸ் அப் செட்டிங்ஸ்கிற்கு சென்று சாட் என்ற பகுதியை கிளிக் செய்து சாட் பேக் அப் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். மேலும், கூகுள் ட்ரைவிற்கு சென்று செட்டிங்கில் எந்த இ மெயில் ஐடியில்‌ பேக் அப் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டுமோ அந்த மெயில் ஐடியை கொடுத்து இணைக்க வேண்டும். அதன்பின் ஆல்வேஸ் பேக்‌அப் என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன்பின் உங்களு‌டைய தகவல்கள் எளிதாக கூகுள் ட்ரைவில் பேக் அப் செய்யப்பட்டு விடும். வைஃபை ஆனில் இருக்கும்போது பேக் அப் செய்தால் நேரத்தையும், டேட்டாவையும் சேமிக்கலாம்.