டெக்

முடங்கிய  வாட்ஸ் அப், ஃபேஸ்புக்: ட்விட்டர் பக்கம் குவிந்த பயனாளர்கள்

முடங்கிய  வாட்ஸ் அப், ஃபேஸ்புக்: ட்விட்டர் பக்கம் குவிந்த பயனாளர்கள்

webteam

சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வாட்ஸ்அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள செயலிகள் உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் ஆகியவை உள்ளன.

சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கிராமில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பயனர்கள் பரிதவித்து வருகின்றனர். இந்த செயலிகளிலிருந்து புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில் ஏற்பட்ட பிரச்னை ஆசியாவுக்கும் விரிவடைந்தது. இந்தியாவில் வாட்ஸ் அப் பயனாளர்கள் படங்களை டவுன்லோடு செய்ய முடியாமல் தவித்தனர். இதேபோல வாய்ஸ் மெசேஜ்களையும் அனுப்ப முடியவில்லை.

முக்கியமான மூன்று சமூக வலைதளங்கள் முடங்கியதால் பயனர்கள் ட்விட்டர் பக்கம் குவிந்தனர். #facebookdown, #instagramdown, #WhatsAppdown  ஆகிய ஹேஸ்டேக்குகளை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர்.