டெக்

வாட்ஸ்அப்-பின் புதிய அப்டேட்..!

வாட்ஸ்அப்-பின் புதிய அப்டேட்..!

webteam

பிரபல கைபேசி செயலியான வாட்ஸ்அப், ஸ்டேட்டஸ் வைப்பதற்கான ஒரு புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வர உள்ளது.

இதன் மூலம், புகைப்படம், ஜிஃப், வீடியோ ஆகியவற்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்க முடியும். இந்த புதிய அறிமுகம் வாட்ஸ்அப்-பின் 8-வது பிறந்தநாளான 24-ம் தேதி வெளியாகும் என்று வாட்ஸ்அப்-பின் முதன்மை செயல் அதிகாரி ஜன் கவும் கூறியுள்ளார். தற்போது வரை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக டெக்ஸ்ட் மட்டுமே வைக்க முடியும். முதற்கட்டமாக இந்த புதிய வசதி ஐரோப்பாவில் அறிமுகமாகியுள்ளது.