டெக்

Spam calls-களில் இருந்து தப்பிக்க புது அப்டேட் கொடுக்கப்போகிறது வாட்ஸ் அப்: என்ன தெரியுமா?

JananiGovindhan

வாட்ஸ்அப் பயனர்களுக்கு அவ்வப்போது அசத்தலான அப்டேட்களை கொடுத்து அதிசயிக்கச் செய்வதை ஒருபோதும் மெட்டா நிறுவனம் தவறுவதே இல்லை. அதன்படி தற்போது புதிய அப்டேட் ஒன்றை விடுவதற்கான பீட்டா சோதனையில் வாட்ஸ் அப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறதாம்.

அதாவது, சாதாரண போன்கால்களில் வரும் சில spam calls-களை சுலபமாக தவிர்ப்பதற்கு எப்படி முக்கிய அமைப்புகள் போன்களிலேயே இருக்கிறதோ அதே போல வாட்ஸ் அப்களிலும் spam calls-கள் வருவதை தடுக்கும் விதமான முனைப்பில்தான் வாட்ஸ் அப் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி, வாட்ஸ் அப் பயனரின் எண் இருந்தால் போதும், அது எதிர்தரப்பினரின் contact-ல் இருக்க வேண்டியதே இல்லை. அப்படிப்பட்ட எண்ணை save செய்யாமல் நேரடியாக தொடர்புகொண்டு சாட் செய்யவோ, வீடியோ கால், வாய்ஸ் கால் செய்யவோ முடியும்.

இப்படியெல்லாம் செய்வதால் யாரென்றே தெரியாதவர்கள் தொடர்புகொள்வது தொடர்வதாக புகார்கள் எழுந்திருக்கிறது. இதனை சீர் செய்யும் விதமாகவே spam calls-களை முடக்க முக்கிய அப்டேட்டை வாட்ஸ் அப் கொடுக்க இருக்கிறது.

அந்த வகையில், வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத நபரிடம் வாய்ஸ் கால் வந்தால் அந்த அழைப்பு ஆட்டோமேட்டிக்காக சைலன்ட் ஆவது போல ஒரு ஆப்ஷனைதான் வாட்ஸ் அப் செட்டிங்ஸில் வர இருக்கிறதாம். அந்த ஆப்ஷனை enable செய்யும் பட்சத்தில் தெரியாதவர்கள் கால் செய்தாலும் ரிங்டோன் கேட்காமல் தானாகவே silent ஆகிக்கொள்ளும்.

ஒருவேளை சைலண்ட் ஆக்கப்பட்ட அந்த அழைப்பு குறிப்பிட்ட பயனருக்கு தெரிந்தவராக இருந்தால் அதனை calls log-ல் சென்று பார்த்துகொள்ள முடியும் வகையிலான இந்த அமைப்பை வாட்ஸ் அப் தற்போது பீட்டா டெஸ்ட்டிங்கில் செய்துக் கொண்டிருக்கிறதாம்.

இந்த தகவல் சில வாட்ஸ் அப் பயனர்களுக்கு நல்ல அப்டேட்டாக பார்க்கப்பட்டாலும், பெரும்பாலும் வாட்ஸ் அப்பில் spam message-களே வாடிக்கையாக வரும் போது அதனை கட்டுப்படுத்தாமல் spam calls-களுக்கு மெட்டாவின் வாட்ஸ் அப் நிர்வாகம் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் என்றும் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.