இந்தியாவைப் பொருத்தவரை அதிகமானோர் பயன்படுத்தும் தகவல்தொடர்பு ஆப் வாட்ஸ்அப். இந்த ஆப்பில்தான் பணம் திருடும் ஆப்பு ஒன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைவரும் விரும்பி பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில்தான் பெரும்பாலும் நம்முடைய அனைத்து தகவல்தொடர்புகளையும் மேற்கொள்கிறோம். போட்டோ, வீடியோ, டாக்குமெண்ட், வாய்ஸ் மெசேஜ், லொக்கேஷன், தொடர்பு எண் போன்ற அனைத்தையும் ஒரு நொடியில் பகிர்ந்துகொள்ளும் வசதிகள் இதில் உள்ளன. நண்பர்களோடு ஜாலியாக உரையாடுவதற்கு மட்டுமில்லாமல், அலுவலக ரீதியிலான தொடர்புகளுக்கும் வாட்ஸ்அப் செயலி முக்கியப் பங்கு வகிக்கிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த வாட்ஸ்அப் செயலியில் புதுமையான முறையில் பணம் திருடும் குழு ஒன்று செயல்படுகிறது.
லண்டனில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு செய்தி வருகிறது. அதில், “நீங்கள் வாட்ஸ்அப் இலவசமாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் காலம் முடிந்துவிட்டது. நீங்கள் 0.99 ஜிபிபி தொகை, அதாவது இந்திய ரூபாயில் 82.19 செலுத்தினால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கு வாழ்நாள் முழுவதும் நீட்டிக்கப்படும்” என்ற செய்தி வருகிறது. தொகை மிகக்குறைவாக உள்ளதால் எல்லோரும் ஏமாந்து பணம் செலுத்துவார்கள் என்று இந்த வேலையை செய்துள்ளனர். இலவசமாக டவுன் செய்து கொள்ளும் செயலியான வாட்ஸ்அப், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டணமாக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.