யூரோப்பா, நாசா
யூரோப்பா, நாசா புதிய தலைமுறை
டெக்

ஜூப்பிட்டர் மற்றும் யூரோப்பா துணை கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?

Jayashree A

விண்வெளி துறையில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் ஜூப்பிட்டர் பற்றியும் அதன் துணை கோளான யூரோப்பா பற்றி செய்யப்படும் ஆய்வுகள் குறித்து Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada அவர்கள் நம்மிடையே பேசியபொழுது,

Dr. விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி

“ஜூப்பிட்டர் கோளை சுற்றி 4 துணை கோள்கள் இருக்கின்றன என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது கலிலியோ. இவர் தனது தொலைநோக்கியின் உதவியால் ஜூப்பிட்டரையும் அதை சுற்றியுள்ள துணை கோள்கள் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்தார்.

ஹப்பிள் தொலைநோக்கி

அதன்பிறகு ஹப்பிள் ஸ்பேஸ் (hubble space) என்ற தொலைநோக்கியின் உதவியால் ஜூப்பிட்டரை விஞ்ஞானிகள் படம் எடுத்தனர்.

ஹப்பிள் தொலைநோக்கியில் எடுக்கப்பட்ட ஜூப்பிட்டர் கிரகம்

இதை அடுத்து ஜெமினி அப்சர்வேட்டிங் என்ற தொலைநோக்கியின் உதவியால் ஜூப்பிட்டரை படம் எடுத்தனர்.

ஜெமினி அப்சர்வேட்டிங் தொலைநோக்கி
ஜெமினி அப்சர்வேட்டிங் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட ஜூப்பிட்டர்

தற்பொழுது ஜேம்ஸ்வெப் தொலைநோக்கியைக்கொண்டு ஜூப்பிட்டரை விஞ்ஞானிகள் துல்லியமாக படம் பிடித்தனர். இதில்தான் பல துல்லியமான விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

அதாவது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் (JWST) இருக்கும் infra red way lens மூலம் எடுக்கப்பட்ட படத்தில், சனி கிரகத்தைப்போன்று ஜூப்பிட்டர் கோளை சுற்றியும் வளையங்கள் இருக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் ஜூப்பிட்டரை சுற்றி 95 துணைக்கோள்கள் இருக்கிறது என்பதையும் நமக்கு தெரியப்படுத்தியது ஜேம்ஸ் வெப்.

மேலும் இதன் வடதுருவத்திலேயும் தென் துருவத்திலேயும் அரோரா இருப்பதையும், துணைக்கோள்களால் அதை சுற்றி உள்ள வளையங்கள் அசைவதையும் ஜேம்ஸ் வெப் படம் பிடித்து அனுப்பியது” என்றார்.

ஜூப்பிட்டர் மூன்:

ஜூப்பிட்டரை சுற்றியுள்ள 95 துணைக்கோள்களில் மிகவும் முக்கியமானது யூரோப்பா என்ற துணைக்கோள்தான்.

ஜூப்பிட்டரின் ரிங் மற்றும் அரோமா

1979ல் வாயேஜர் 1 விண்கலம் ஜூப்பிட்டர் அருகில் செல்லும் பொழுது யூரோப்பா துணைகோளை ஆராய்ந்தது.

வாயேஜர் 1 படம்பிடித்து அனுப்பிய யூரோப்பா நிலவு

அதன்பிறகு ஜூனோஸ் ஃபேஸ் கிராப்ட் 2022 (juno cam) யூரோப்பா துணைக்கோளை எடுத்த படம் -

ஜூனோஸ் ஃபேஸ் கிராப்ட் யூரோப்பா நிலவை எடுத்த பட்ம்

சமீபத்தில் JWST 2023ல் ஜூப்பிட்டரை படம் பிடித்து அனுப்பியதுடன் அதில் மறைந்துள்ள பல ரகசியங்களை வெளிக்கொண்டு வந்தது.

JWST 2023 ஜூப்பிட்டரை எடுத்த படம்

JWST 2023 ல் ஜூப்பிட்டரை படம் பிடித்து அனுப்பியதுடன் பல்வேறு ரகசியங்களையும் வெளிக்கொண்டுவந்துள்ளது. இதன்படி நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, யுரோப்பாவில் பனிக்கட்டி மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். தாரா ரெஜியோ என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளதாகவும், புவியியல் ரீதியாக இது மிகவும் இளமையான பகுதி எனவும் கூறப்படுகிறது. 1,944 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட யூரோப்பா துணைக்கோளில் 320 மீட்டர் சதுர கிலோமீட்டரில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இதை பற்றி ஆய்வு செய்வதற்காக நாசா யூரோப்பா கிளிப்பர் என்ற ஆய்வை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனேகமாக இந்த வருட கடைசியில் நாசா இந்த ஆய்வை செய்ய இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.