ரோபோக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றால் மனிதத் திறனை ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்று விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், கற்பனைத்திறன், சவாலைத் தீர்க்கும் திறன், உணர்வுபூர்வமாக முடிவெடுத்தல் போன்ற ஆக்கபூர்வமான மனிதப் பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பம் ஒரு சவால் அல்ல என்று கூறினார்.
ஆபத்தான பணிகளை ஏஐ தொழில்நுட்பம் ஏற்றுக்கொள்வதால், மனிதர்கள் ஆழமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் மீது கவனம் செலுத்த, இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும்சுபான்ஷு சுக்லா நம்பிக்கைதெரிவித்தார்.