ககன்யான் திட்டம்
ககன்யான் திட்டம் pt web
டெக்

ககன்யான் திட்டத்தின் சிறப்புகள் என்னென்ன?

PT WEB

ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்கீழ் தரையில் இருந்து 400 கி.மீட்டர் தூரம் சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பி அவர்களை மீண்டும் பூமிக்கு பத்திரமாக திரும்ப அழைத்துவர இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை 2025-ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதற்குமுன் 3 கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தவகையில் இஸ்ரோவின் முதல்கட்ட சோதனை நிகழ்வு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.

ககன்யான் திட்டம்

இதன்மூலம் மனிதர்களை விண்ணுக்கு சுமந்து செல்லவுள்ள மாதிரி விண்கலத்தை (crew module) தரையில் இருந்து 16.6 கிலோமீட்டர் தூரம் வரை அனுப்பி, மீண்டும் அதை பூமிக்கு கொண்டுவந்து வங்கக்கடலில் இறக்குவர். இந்த சோதனைக்கு டிவி- டி1 எனும் ஒரு பூஸ்டர் கொண்ட ராக்கெட் பயன்படுத்தப்படுகிறது.

புவியில் இருந்து ராக்கெட் புறப்பட்டு சுமார் 16.6 கிலோமீட்டர் உயரத்தில் சென்றதும் விண்கலத்தில் வீரர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்துவிடும். பின் அது பாராசூட்கள் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் வங்கக்கடலில் பத்திரமாக இறக்கி சோதனை செய்யப்படும்.

kaganyan project

ககன்யான் திட்டத்தில் உள்ள ராக்கெட் சுற்றுவட்ட பகுதி, மனிதர்கள் சுமக்கும் பகுதி, சேவை பகுதி என மூன்று விதமான அமைப்புகள் கொண்டதாக உள்ளது. ககன்யான் திட்டத்தை முழுமையாக வெற்றி பெற வைக்க இந்த மூன்று பகுதிகளும் சரியாக செயல்படுவது அவசியம். எனவேதான் ரயில் தண்டவாளம் மற்றும் இந்திய கடற்படையின் கப்பல் மூலம் ககன்யான் திட்டத்தின் இழுவிசை சோதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முதல் கட்ட சோதனையான மாதிரி விண்கலத்தை விண்ணில் அனுப்பி மீண்டும் தரையில் கொண்டு வரும் சோதனை நடத்தப்பட்டது.

முதல் கட்ட சோதனை வெற்றிபெற்ற நிலையில் அடுத்த கட்ட சோதனையின்போது மெய்நியர் தொழில்நுட்பமான வாயு மித்ரா எனப்படும் ரோபோட்டை விண்கலத்தின் அனுப்பி வெப்பநிலை மற்றும் இயங்கு நிலை சோதனை நடத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.