டெக்

வாட்ஸ்-அப்பில் ‘Waveform’-இல் வாய்ஸ் மெசேஜ்கள் - இப்போதைக்கு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே!

EllusamyKarthik

உலக அளவில் பெருவாரியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்-அப் செயலியில் ‘Waveform’-இல் வாய்ஸ் மெசேஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த புதிய வசதியை பீட்டா பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாட்ஸ்-அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.21.25.11 அல்லது வாட்ஸ்-அப் iOS பீட்டா வெர்ஷன் 2.21.240.18 இந்த புதிய அப்டேட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீட்டா வெர்ஷனை பயன்படுத்தி வரும் பயனர்களில் சிலர் ‘Waveform’-இல் வாய்ஸ் மெசேஜ்களை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் முதலே இந்த புதிய அப்டேட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளதாம் வாட்ஸ்-அப் நிறுவனம். 

ஒலியின் பிட்சுக்கு ஏற்ற வகையில் வாய்ஸ் மெசேஜில் பயனர்கள் ஏற்ற இறக்கத்தை கவனிக்க முடியும். அதே போல வாட்ஸ் வெப் மற்றும் டெஸ்க்டாப் வெர்ஷனில் மெசேஜ் ரியாக்ஷன் நோட்டிபிகேஷனை ஆப் செய்து வைக்கும் வசதியும் அறிமுகமாக உள்ளதாம். பீட்டா வெர்ஷன் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வரும் இந்த புதிய அம்சம் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.