கூடிய விரைவில் விவோ நிறுவனத்தின் வி23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன. அது குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் வி23 5ஜி மற்றும் வி23 ப்ரோ 5ஜி போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் வி23 ப்ரோ 5ஜி போன் மிக ஸ்லிம்மான 3டி கர்வ் டிஸ்பிளே கொண்ட போன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வி23 5ஜி!
மீடியாடெக் டைமன்சிட்டி 920 SoC, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த போன். 6.44 இன்ச் டிஸ்பிளே, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, இரண்டு செல்ஃபி கேமரா என அசத்துகிறது. இதன் விலை 26000 முதல் இருக்கலாம் எனத் தகவல்.
விவோ வி23 ப்ரோ 5ஜி!
மீடியாடெக் டைமன்சிட்டி 1200 SoC, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டுள்ளது இந்த போன். 6.56 இன்ச் டிஸ்பிளே, ரியர் சைடில் மூன்று கேமரா, அதில் 108 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா உள்ளது. வி23 5ஜி போலவே இதிலும் இரண்டும் செல்ஃபி கேமரா உள்ளது. அதில் ஒரு கேமரா 50 மெகாபிக்சல், மற்றொன்று 8 மெகாபிக்சலாக உள்ளது. மற்றும் இதன் விலை 37000 ரூபாய் முதல் இருக்கும் என தெரிகிறது. வரும் ஜனவரியில் இந்த போன் சந்தையில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.. கோல்ட் மற்றும் கருப்பு நிறத்தில் இந்த போன் வெளியாகும் என தெரிகிறது.