டெக்

இது விர்ச்சுவல் சுற்றுலா: இந்தியாவுக்கு வந்தது கூகுளின் டே-ட்ரீம்

இது விர்ச்சுவல் சுற்றுலா: இந்தியாவுக்கு வந்தது கூகுளின் டே-ட்ரீம்

Rasus

கூகுள் நிறுவனம் டே-ட்ரீம் வியூ (Daydream View) என்ற புதிய விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மெய்நிகர் காட்சிகளை (Virtual Reality) பார்ப்பதற்கான புதிய வி.ஆர். ஹெட்செட் இது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த டே-ட்ரீம் வி.ஆர். ஹெட்செட் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

லென்ஸ், ரிமோட் கண்ட்ரோலர், எலாஸ்டிக் பட்டை, ஸ்க்ராலிங் வசதியுடன் பயன்படுத்துபவருக்கு வசதியான முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கூகுள் டே-ட்ரீம், ரூ.6499-க்கு ப்ளிப்கார்ட் மூலம் விற்கப்படுகிறது.

கூகுள் டேட்-ட்ரீம் வி.ஆர்..ஹெட்செட்டை, யூ-ட்யூப் வி.ஆர், ஸ்ட்ரீட் வியூ, ப்ளே மூவீஸ் போன்ற அப்ளிகேஷன்களுக்கு பயன்படுத்தலாம்.