சந்திராயன் 3  ன்  புதிய புகைப்படம்.
சந்திராயன் 3 ன் புதிய புகைப்படம். புதியதலைமுறை
டெக்

நிலாவ இதுக்கு முன்னாடி இப்படி பார்த்திருக்கீங்களா..?

PT WEB

பூமியிலிருந்து நிலவை ஆராய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் கடந்த 37 நாட்களாக தனது பயணத்தை அயராது மேற்கொண்டு வருகிறது.

சந்திராயன் 3 ன் புகைப்படம்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 17ஆம் தேதி சந்திரன் 3 விண்கலத்தின் லேண்டர் உந்துவிசை கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது. இதனை அடுத்து 153 கிலோ மீட்டர் குறைந்தபட்ச சுற்று வட்ட பாதையில் நிலவின் மேற்பரப்பை லேண்டர் சுற்றி வந்தது. இதன் பிறகு 18ம் தேதி லேண்டர் 13 கிலோ மீட்டர் தூரமாக குறைக்கப்பட்டது. தற்போது நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்த லேண்டரின் உயரம் 25 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி 25* 134 கிலோ மீட்டர் நீள்வட்ட பாதையில் தற்போது லேண்டன் சுற்றி வருகிறது.

தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவின் தென் பகுதியில் மாலை 6.04 மணி அளவில் லேண்டர் விக்ரம் தரை இறக்கப்பட உள்ள நிலையில் இதுவரை மூன்று முறை நிலவின் உயரம் குறைக்கப்பட்டு நிலவை சுற்றி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திராயன் 3 நிலவின் புதிய புகைப்படம்

இந்தநிலையில் தற்போது நிலவின் புதிய படங்களை சந்திராயன் 3 ன் லேண்டர் விக்ரம் வெளியிட்டுள்ளது.மேலும் தரையில் இறங்க உகந்த இடத்தை தேர்வு செய்யும் வகையிலும் புகைப்படங்களை எடுத்து வருகிறது.

- ஜெனிட்டா ரோஸ்லின் . S