டெக்

திடீரென முடங்கிய யூடியூப் சேவை

திடீரென முடங்கிய யூடியூப் சேவை

JustinDurai

உலக அளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியதால், பயனாளர்கள் அவதியடைந்தனர்.

யூடியூப் கணக்கின் உள் நுழைய முடியாமலும், ஸ்மார்ட் டிவிகளில் யூடியூப் சேவையை பெற முடியாமலும் போனதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேவிகேஷன் பார் பகுதியை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டதாக பயனாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஏராளானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், யூடியூப் சேவை முடங்கியதை உறுதி செய்த அந்த நிறுவனம், பிரச்னையை சரி செய்து வருவதாக தெரிவித்தது. இதையடுத்து சில மணி நேரத்தில், யூடியூப் தளத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க: மார்க் ஜூக்கர்பெர்க் பாதுகாப்புக்கு இத்தனை கோடிகளா? வெளியான தகவல்