ola, uber pt web
டெக்

செல்போன்களின் அடிப்படையில் கட்டணம்? உபர் மற்றும் ஓலா ஆப்களில் மோசடியா? நிறுவனம் சொல்வதென்ன?

உபர் மற்றும் ஓலா ஆப்களின் மூலம் வாகனங்களை புக்கிங் செய்யும்போது ஆண்ட்ராய்ட் போன்களில் குறைந்த தொகை கட்டணமும், ஐஃபோன்களில் அதிக தொகை கட்டணமும் நிர்ணயிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

PT WEB

உபர் மற்றும் ஓலா ஆப்களின் மூலம் வாகனங்களை புக்கிங் செய்யும்போது ஆண்ட்ராய்ட் போன்களில் குறைந்த தொகை கட்டணமும், ஐஃபோன்களில் அதிக தொகை கட்டணமும் நிர்ணயிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒரே நேரத்தில் ஆண்ட்ராய்ட் போன் மற்றும் ஐஃபோன்களில் உபர் மற்றும் ஓலா ஆப்களில் சென்று, ஒரே இடத்திற்கு செல்ல கார் புக்கிங் செய்தபோது, ஆண்ட்ராய்ட் போனை விட ஐஃபோனில் கூடுதல் கட்டணம் காண்பிக்கப்பட்டது தெரியவந்தது.

ola

சென்னையில் இருந்து 3 இடங்களுக்கு செல்ல ஆப்களில் கார் புக்கிங் செய்தபோது, சுமார் 50 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை இரு ஃபோன்களில் வெவ்வேறு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்ததை ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மடிப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலுக்கு செல்ல ஆண்ட்ராய்ட் போன் ஆப்பில்195 ரூபாயும், ஐஃபோன் ஆப்பில் 260 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது.

ஆவடியில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு செல்ல ஆண்ட்ராய்ட் ஆப்பில் 961 ரூபாயும், ஐஃபோன் ஆப்பில் ஆயிரத்து பத்து ரூபாயும் கட்டணம் காண்பித்தது. இதேபோல் தியாகராய நகரில் இருந்து எழும்பூர் செல்ல ஆண்ட்ராய்ட் ஆப்பில் 180 ரூபாயும், ஐஃபோன் ஆப்பில் 344 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள உபர் நிறுவனம், பயணிக்கும் தொலைவு, இலக்கை அடையும் நேரம், அந்த நேரத்தின் தேவை ஆகியவற்றை பொறுத்தே கட்டணம் நிர்ணயிக்கப்படுவதாகவும், பயணிகளின் செல்போன்களின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஓலா நிறுவனத்தை தொடர்புகொள்ள முயன்றபோது, உரிய பதில் அளிக்கப்படவில்லை என டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.