டெக்

வியாழனில் அமோனியா ஆறு!

வியாழனில் அமோனியா ஆறு!

Rasus

வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

வியாழன் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் ஜூனோ என்ற விண்கலத்தைத் தயாரித்து, கடந்த 2011, ஆகஸ்ட் 5-ம் தேதி விண்ணில் செலுத்தினர்.  வியாழன் கிரகத்தின் காந்தபுலத்துக்குள் நுழைந்த ஜூனோ விண்கலம் வியாழன் கிரகத்தின் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, அதன் மேற்பரப்பு மற்றும் உள்பரப்பை ஆராயும் பணிகளை செய்து வந்தது. 

இந்நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை அனுப்பியிருக்கிறது. முதல் முதலாக வியாழனுக்கு நெருக்கமாகச் சென்ற இந்த விண்கலம், மிகத் துல்லியமான புகைப்படங்களை எடுத்திருக்கி‌றது. குழப்பமான வானிலை அமைப்புகள் மற்றும் கிரகத்தின் உட்புற படங்கள், உயரமான, வெள்ளை புயல் மேகங்களின் படங்கள், வியாழனின் வளிமண்டலம், மேகங்கள் உள்ளிட்டவை குறித்தும் புதிய தகவல்களை ஜுனோ அனுப்பியிருக்கிறது. வியாழன் கோளில் புயல் வீசியிருப்பதும், அம்மோனியா ஆறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.