டெக்

அனைத்து மின் சாதனங்களிலும் டைப்-C சார்ஜிங் போர்ட் கட்டாயம் - ஐரோப்பிய ஆணையம்

EllusamyKarthik

அனைத்திற்கும் பொதுவான வகையில் டைப்-C சார்ஜிங் போர்ட்டை கட்டாயமாக பொருத்த வேண்டுமென ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தியாளர்கள் இடத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் (EUROPEAN COMMISSION) முன்மொழிந்துள்ள புதிய விதியின் கீழ் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் கழிவு சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த விதியை கொண்டு வருவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மக்கள் புதிதாக மின் சாதனங்களை வாங்கும்போது அவர்களது பழைய சாதனத்தின் சார்ஜரை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. 

இந்த விதி வொயர்லஸ் சார்ஜர்களை கொண்டுள்ள சாதனங்களுக்கு இப்போதைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டமாக அமலுக்கு வர ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டியுள்ளது. கடந்த 2020-இல் அனைத்திற்கும் பொதுவான சார்ஜர்கள் தேவை என ஆதரவு குரல் எழுப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தற்போது சந்தையில் கிடைக்கின்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் டைப்-C சார்ஜிங் போர்டுடன் தான் கிடைக்கிறது. இருப்பினும் இந்த புதிய விதி ஆப்பிள் நிறுவனத்திற்கு சிக்கலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.