டெக்

தினமும் 1 மில்லியன் போலிக் கணக்குகளை நீக்குவதாக ட்விட்டர் தகவல்! கிண்டலடித்த எலான் மஸ்க்!

ச. முத்துகிருஷ்ணன்

சமீபத்தில் ட்விட்டர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் போலிக் கணக்குகளை நீக்கி வருவதாக தெரிவித்து இருந்தது.

ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க முன்வந்த டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அத்தளத்தில் உள்ள போலிக் கணக்குகளின் எண்ணிக்கையை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு நிபந்தனையை முன்வைத்தார். போலிக்கணக்குகள் 5 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மட்டுமே, ட்விட்டரை வாங்குவேன் என்று தடாலடியாக அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் போலிக் கணக்குகளை நீக்கி வருவதாக தெரிவித்து இருந்தது. இதை கிண்டல் செய்யும் விதமாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். ட்விட்டர் பயனர் ஒருவர், ஒரு மில்லியன் போலிக் கணக்குகளை ட்விட்டர் நீக்குகிறது என்றால் ஒரு நாளைக்கு எத்தனை கணக்குகள் துவக்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளித்துள்ள எலான் மஸ்க், “அதுதான் உண்மையான கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார்.