11 ஆண்டுகளாக இலவசச் சேவை வழங்கி வரும் ட்விட்டர், கட்டணத்துடனான உறுப்பினர்கள் கணக்கை தொடங்க திட்டமிட்டுள்ளது.
இதுவரை விளம்பரங்களை நம்பி செயல்பட்டுக்கொண்டிருந்த ட்விட்டர் நிறுவனம், சமீபகாலமாகப் போதிய விளம்பர வருமானம் இல்லாததால் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது. இதற்காக பிரீமியர் வாடிக்கையாளர், இரண்டாம் நிலை வாடிக்கையாளர் என தரம் பிரித்து அவர்களுக்கு என பிரத்யேக சந்தா கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளது. இதற்காக ட்விட்டர் நிறுவனம் நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.