உலக அளவில் பிரபலமான ட்விட்டர் ஹேஷ்டேக் தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரபலமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நடிகர், நடிகைகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் செயல்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 5 எழுத்தில் மட்டுமே செய்தியை பகிர முடியும் என்று இருந்த ட்விட்டரில் தற்போது 140 எழுத்துகளில் செய்தியை பகிரலாம்.
நாள் ஒன்றுக்கு சுமார் 125 மில்லியன் டிவிட்டர் ஹேஷ்டேக்குகள் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளை பகிர ட்விட்டர் ஹேஷ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வலைதளவாசிகள் கருத்துக்களையும் செய்திகளையும் பரிமாறி வந்தனர். ஆனால், ட்விட்டரின் வருகைக்கு பின், அது அதிகமாக டிரெண்டாகி வருகிறது. ஒரு செய்தியை ட்வீட் செய்ய ஹாஷ் (#) எனப்படும் அடையாளத்தை பயன்படுத்தி செய்தி பகிரப்பட்டது.
இது மிக எளிமையான முறையில் இருந்ததால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. இந்த ட்விட்டர் தற்போது தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ட்விட்டர் தனது பிறந்தநாளை #Hashtag10 என்ற ஹேஷ் டேக்குடன் கொண்டாடியது.