நாசா அனுப்பிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி பங்கேற்றுள்ளார்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது. இந்த வெப் தொலைநோக்கி வழியாக வானியல் சார்ந்த விஷயங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டன. குறிப்பாக சூரியக் குடும்பத்தைத் தாண்டி என்ன இருக்கிறது? அண்டம் உருவானது எப்படி? நட்சத்திரங்கள் அமைப்பு மற்றும் அதன் ஆயுட்காலம் ஆகியவை ஆராய்வதற்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்துக்காக, இந்திய ரூபாயில் சுமார் 75,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செலவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட இந்தத் திட்டத்தை ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு மேல் நாசா திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது. வானியல் ஆராய்ச்சியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ஒரு தொலைநோக்கியாக இந்த தொலைநோக்கி செயல்பட உள்ளது.
இந்த தொலைநோக்கியை வடிவமைப்பதிலும் விண்ணில் செலுத்தி கண்காணிப்பதிலும் பல விஞ்ஞானிகள் பங்கேற்றுள்ளனர். அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து டாக்டர் ஹாஷிமா ஹாசன் என்ற பெண் விஞ்ஞானியொருவரும் இடம் பெற்றுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்த இவர், பள்ளி கல்லூரி படைப்புகளைப் முடித்து பின்னர் வானியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அமெரிக்காவில் பல்வேறு பட்டங்களை பெற்று நாசாவின் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி திட்டத்தில், இந்தியப் பெண் விஞ்ஞானி பங்கு கொண்டிருப்பது இந்தியர்களை மிகவும் பெருமையடையச் செய்திருக்கிறது.