டெக்

அதிக பார்வையாளர்களை சென்றடைந்த டாப் 10 விளம்பரங்கள்

அதிக பார்வையாளர்களை சென்றடைந்த டாப் 10 விளம்பரங்கள்

webteam

திரைப்படங்கள் இயக்குவது, ஆவணப்படம் இயக்குவது, குறும்படம் இயக்குவது ஆகியவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. கேமராவை வைத்து காட்சிகள் அமைத்துவிடுவதால் அனைத்தும் ஒன்றாகிவிடாது. அதேபோல் சவாலான மற்றொன்று உள்ளது. அது விளம்பரம். தொலைக்காட்சிகளில் வணிக ரீதியிலானவைதான் விளம்பரங்கள். விளம்பரம், மக்கள், தொலைக்காட்சி இவை மூன்றும் இணைக்கப்பட்டு ஒரு வணிகம் நடைபெற்று வருகிறது. விளம்பரங்களின் சவால் என்பது குறைந்த நொடிகளில் மக்களை கவர வேண்டும். அவர்கள் சொல்ல வருவதையும் கூறிவிட வேண்டும். மிக நீளமான விளம்பரங்கள் மக்களை அசதியாக்கிவிடும் என்பது பொதுவான பார்வை. ஆனால் தொலைக்காட்சி தாண்டி இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களிலும் விளம்பரங்கள் பரவ தொடங்கியுள்ளன. 

குறிப்பாக யு டியூப்பில் விளம்பரங்கள் அதிகம். ஏதாவது ஒரு வீடியோவின் தொடக்கத்திலும், இடையிடையேவும் விளம்பரங்கள் வந்து போகின்றன. இந்நிலையில் சில விளம்பரங்கள் நேரக்கட்டுப்பாடு இல்லாமல் குறும்படம் அளவுக்கு ஓடுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அப்படியாக 2018ம் ஆண்டின் சிறந்த 10 விளம்பரங்களை யு டியூப் அறிவித்துள்ளது. அதனை தற்போது காணலாம்.

1. ஹூண்டாய் கார்

தன்னுடைய இருபது வருட வாழ்க்கையுடன் இணைந்து பயணித்த ஒரு காரின் நினைவுகளை அழகாக காட்சிப்படுத்தும் இந்த விளம்பரம் 220 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

2. சாம்சங்:

சாம்சங்கில் உள்ள வாய்ஸ் அசிட்டெண்ட் மூலம் அம்மாவுக்கும், மகளுக்கும் இடையேயான உறவை நெகிழ்ச்சியாய் பதிவு செய்திருக்கும் இந்த விளம்பரம் 200மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

3. இண்டியாபுல்ஸ் தனி  (Indiabulls Dhani):

செல்போன் மூலம் எளிதாக வங்கிகளில் லோன் பெறுவது தொடர்பான Indiabulls Dhani விளம்பரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த விளம்பரத்தில் தோனி வந்து தொகுத்து வழங்குவது கூடுதல் பலம்.

4. ஹோண்டா

இந்தியாவின் பல தரப்பு மக்களுக்கு இரு சக்கர வாகனம் என்பது எத்தனை பெரிய கனவு என்பது குறித்து ஹோண்டா நிறுவனம் தயாரித்துள்ள விளம்பரம் நான்காவது இடத்தில் உள்ளது. 

5. கார்னியர்:

பாலிவுட் நடிகை அலியாபட் நடித்துள்ள கார்னியர் விளம்பரம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அலியாபட்டின் கியூட் ரியாக்‌ஷன்கள் இந்த விளம்பரத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

6. டாடா மோட்டார்ஸ்:

கனவுகளை சென்றடையுங்கள் என்ற வாசகத்துடன் 1.12 நிமிடங்கள் ஓடும் டாடா மோட்டார்சின் விளம்பரம் 6வது இடத்தை பிடித்துள்ளது. 46 மில்லியன் பார்வைகளை இந்த விளம்பரம் கடந்துள்ளது.

7. குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம்:

குழந்தைகளை கவரும் விதத்தில் அனிமேஷன், மனதில் எளிதில் பதியும் பாடல் என்று மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம். 20 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த விளம்பரம் 43 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

8. ஆப்பிள்:
  

பார்வையாலேயே போனின் லாக்கை திறக்கும் புதிய வசதிக்காக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட வீடியோ 8வது இடத்தை பிடித்துள்ளது. அதிரடியான கிராபிக்ஸ் காட்சிகள், அடுத்து என்னவென்ற எதிர்பார்ப்பு ஆகியவை இந்த விளம்பரத்தின் வெற்றி.

9. உபர்: 

உபர் கால்டாக்சியின் விளம்பரம் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து முன்னேறுங்கள் என்ற வாசகத்துடன் விராட் கோலி நடித்திருப்பது இந்த விளம்பரத்தின் பலமாக உள்ளது.

10. ஓப்போ: 

உண்மையான ஆதரவு உண்மையான ஹீரோக்களை உருவாக்கும் என்ற வாசகத்துடன் உருவாகிய ஓப்போ செல்போன் விளம்பரம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கோலி, ரோஹித் சர்மா, பாண்டியா, அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.