டெக்

ஆதார், பான் மற்றும் இபிஎஃப் திட்ட இணைப்பில் தடங்கல்கள் இல்லை: UIDAI

Veeramani

ஆதார்-பான் மற்றும் பணியாளர் வருங்கால வைப்பு திட்ட இணைப்பில் தடங்கல்கள் இல்லை என்று மின்னணு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், உடாய் என்று அழைக்கப்படும் இந்திய பிரத்தியேக அடையாள ஆணையம், அதன் சேவைகள் நன்றாக செயல்பட்டு வருவதாக இன்று தெரிவித்துள்ளது. ஆதார்-பான்/பணியாளர் வருங்கால வைப்பு திட்ட இணைப்பில் தடங்கல்கள் இல்லை என்று அது கூறியுள்ளது.

மிகவும் அவசியமான மேம்பாட்டு நடவடிக்கைகளை கடந்த வாரம் அதன் அமைப்புகளில் படிப்படியாக மேற்கொண்டு வந்ததாக கூறிய உடாய், இணைப்பு மற்றும் கைப்பேசி விவரம் சேர்த்தல் ஆகிய வசதிகளில் மட்டும் சில மையங்களில் தடங்கல்கள் ஏற்பட்டதாகவும், அவையும் தற்போது நன்றாக செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இருந்த போதிலும், மக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக உடாய் தெரிவித்துள்ளது.

மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடங்கிய  2021  ஆகஸ்ட் 20  முதல் கடந்த ஒன்பது நாட்களில்  51 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவு செய்து கொண்டிருப்பதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 5.68 லட்சம் பேர் பதிவு செய்து கொண்டிருப்பதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது. ஒரு நாளைக்கு 5.3 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. ஆதார்-பான்/பணியாளர் வருங்கால வைப்பு திட்ட இணைப்பில் தடங்கல்கள் ஏற்பட்டதாக கூறிய சில ஊடக செய்திகளை உடாய் மறுத்துள்ளது