டெக்

ஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்

ஸ்மார்ட்போன்களை இயக்கும் ரோபோ விரல்

webteam

ஸ்மார்ட்ஃபோன் மற்றும் டேப்லெட் பயனாளர்களுக்கென ரோபோட்டிக் விரல் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களை விரலுக்கு பதிலாக இந்த ரோபோவை பயன்படுத்தி இயக்க முடியும். ஸ்மார்ட்ஃபோன்களின் மீது நுட்பமாக இயங்கும் வகையில் 5 மோட்டார்கள் கொண்டு இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனித விரல்கள் போன்றே காட்சிதருகிறது. நாம் கூறும் கட்டளைகளை உள்வாங்கிக்கொண்டு ஸ்மார்ட்போன்களையும் இயக்குகிறது. அதுமட்டுமின்றி மேசை மீதுள்ள செல்போனை தானாகவே நகர்த்தி செல்கிறது. செல்போன்களில் குறுஞ்செய்தி அல்லது அழைப்பு வரும்போது நமக்கு தகவலும் கொடுக்கிறது.