டெக்

இறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை

இறுதிகட்ட பணியில் சந்திராயன்-2: மயில்சாமி அண்ணாதுரை

Rasus

சந்திராயன்-2 விண்கலத்தின் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், சந்திராயன்-2 விண்கலம், நிலவிலிருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் நிலைகொண்டு ரோவர் என்ற வாகனத்தின் உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்று விளக்கினார்.

சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கான ஆதித்யா என்னும் செயற்கைகோளை வடிவமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளதாகவும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.