டெக்

திருடப்பட்ட செல்போன்களை கண்டுபிடிக்கும் வசதி ! 

webteam

திருட்டுப்போன அல்லது காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப சேவையை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் தொழில்நுட்ப சேவையை மத்திய அரசு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதுதொடர்பாக தொலைத்தொடர்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்த தகவலின்படி, காணாமல் போன அல்லது திருட்டுப்போன போனின் சிம் மாற்றப்பட்டாலும் ஐஎம்இஐ எண் மாற்றப்பட்டாலும் வேறு நெட்வொர்க்குக்கு மாறினாலும் அது இயங்க முடியாதபடி செய்யப்படும். மேலும் அந்த போன் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்படும் என்றும் அந்த அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதற்காக செல்போன்கள் மற்றும் போலி செல்போன்களை கண்டுபிடிக்கும் மையத்தை 15 கோடி ரூபாய் செலவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டதாகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்கனவே சோதனை ரீதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்மூலம் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்கும் திட்டம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.