டெக்

இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது 'Asus 8z' ஸ்மார்ட்போன்

EllusamyKarthik

தைவான் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் Asus நிறுவனம் கம்ப்யூட்டர், மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை உருவாக்கி வரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் 'Asus 8z' ஸ்மார்ட்போன நாளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் மூலம் இதனை Asus இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது. பகல் 12 மணி அளவில் நடிகர் மிலிந்த் சோமன் இந்த போனை அறிமுகம் செய்ய உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த போன் காம்பேக்ட் மாடலாக களம் காண உள்ளது. கடந்த 2021 மே மாத வாக்கில் இந்த போன் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இப்போதுதான் சந்தையில் அறிமுகமாகிறது. ஐபோன் 13 மாடல் ஸ்மார்ட்போனை ஒத்த வடிவில் இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

சிறப்பம்சங்கள்!

5.9 இன்ச் டிஸ்ப்ளே, ஃபுல் ஹெச்.டி, ஸ்னாப்டிராகன் 888 SoC, 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்ட்டுகள், ரியர் சைடில் இரண்டு கேமரா, அதில் 64 மெகாபிக்சல் சோனி IMX686 பிரைமரி சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் சோனி IMX363 செகண்டரி சென்சார் கேமரா இடம் பெற்றுள்ளது. 12 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் இடம்பெற்றுள்ளது. 

 

4000mAh பேட்டரி, 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன், டைப் சி சார்ஜிங் போர்ட் மாதிரியானவை இதில் இடம்பெற்றுள்ளது. கருப்பு மற்றும் சில்வர் என இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிகிறது.