டெக்

ரூ.65,000 வரை தள்ளுபடி.. - இயர் எண்ட் ஆஃபர்களை அள்ளித்தூவும் டாடா மோட்டார்ஸ்!

ரூ.65,000 வரை தள்ளுபடி.. - இயர் எண்ட் ஆஃபர்களை அள்ளித்தூவும் டாடா மோட்டார்ஸ்!

webteam

வருடக் கடைசிக்கான ஆஃபர்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ரக கார்களுக்கு ரூ.65ஆயிரம் வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது

வருடத்தின் கடைசியில் விலை குறைப்பு ஆஃபர்களை கார் நிறுவனங்கள் அறிவிப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான இயர் எண்ட் ஆஃபர்களை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. ரூ.65ஆயிரம் வரை ஆஃபர்களை அறிவித்துள்ளது டாடா. அதன்படி, Tiago, Tigor, Nexon மற்றும் Harrier flagship SUV உள்ளிட்ட கார்களுக்கு அதன் விலைகளுக்கு ஏற்ப தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி டிசம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும்.

Tata Harrier flagship SUV கார்களுக்கு ரூ.65ஆயிரம் வரை தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. எக்ஸ்சேஞ் ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தள்ளுபடியானது SUVன் CAMO and Dark எடிசன் (XZ+ and XZA+ வேரியண்ட்ஸ்) ஆகியவற்றுக்கு பொருந்தாது. Nexon மாடல்களும் டாடாவின் ஆஃபர் லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட வகை தள்ளுபடி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.15ஆயிரம் எக்ஸ்சேஞ் ஆஃபர் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆஃபர்கள் Nexon பெட்ரோல் மாடல்களுக்கு இல்லை.

அதேபோல் Tiago மாடல்களுக்கு ரூ.25ஆயிரம் வரை தள்ளுபடியும்., ரூ. 15ஆயிரம் வரை எக்ஸ்சேஞ் ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த வகை கார்களுக்கு ரூ.30ஆயிரம் வரையும் தள்ளுபடி கிடைக்கும்.

Source: carandbike.com