சென்னை மாணவர்களின் செயற்கைக்கோளை ஆகஸ்ட் மாதம் விண்ணில் நாசா ஏவுகிறது.
சென்னை தனியார் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு ரோஸ்பேஸ் பொறியியல் பட்டப்படிப்பில் படித்து வரும் மாணவர்கள் ஹரிகிருஷ்ணன், அமர்நாத், கிரிபிரசாத், சுதி. இவர்கள் ஒன்றாக சேர்ந்து 33.39 கிராம் எடை உள்ள ஜெய்ஹிந்த் எஸ்1 என்ற செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இந்தச் செயற்கைக்கோள் உலகிலேயே மிக குறைந்த எடை கொண்டதாகும். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோளின் எடை 64 கிராம் ஆகும். இதனை தயாரிப்பதற்கு மொத்த செலவே ரூ 15 ஆயிரம்தான் ஆனதாக கூறி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார் சுதி.
இவர்கள் தயாரித்துள்ள இந்தச் செயற்கைக்கோள் நாசா நடத்திய குயூப்ஸ் இன் ஸ்பேஸ் போட்டியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வானிநிலை ஆராய்ச்சி சம்பந்தமான புதிய தகவல்களை கண்டறிய இந்தச் செயற்கைகோள் மேலும் உதவி செய்யும் எனக் கூறுகிறார்கள் இந்த மாணவர்கள். மேலும் இந்தச் செயற்கைக்கோள் நைலானை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான செய்தி.
இந்நிலையில் இந்த மாணவர்கள் தயாரித்துள்ள செயற்கைக்கோளை வரும் ஆகஸ்ட் மாதம் நாசா, விண்வெளியில் செலுத்த உள்ளது. இந்தச் சாதனை உலக அரங்கில் சென்னை மக்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தித் தர உள்ளது.