டெக்

கேள்விக்குறியதா கூகுள் மேப்-களின் உண்மைத்தன்மை...?

கேள்விக்குறியதா கூகுள் மேப்-களின் உண்மைத்தன்மை...?

webteam

கூகுள் வரைப்படங்களின் உண்மைத்தன்மை கேள்விக்குறியது என்று கூறியுள்ள சர்வேயர் ஜெனரல் ஸ்வர்ணா சுப்பாராவ், அவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்று கூறியுள்ளார். 

இந்திய தொடர்பான வரைபடங்கள் அனைத்தும் சர்வே ஆஃப் இந்தியா மூலமாக தயாரிக்கப்படுகிறது. ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைக்கு தேவையான வரைப்படங்களையும் இத்துறையினர் தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த அமைப்பின் தலைமை சர்வேயர் ஜெனரல் ஸ்வர்ணா சுப்பாராவ், தற்போது பிரபலமாக உள்ள கூகுள் மேப் குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். கூகுள் மேப்-ன் உண்மைத்தன்மை கேள்விக்குறியது எனக்கூறிய அவர், அவை இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்றும் தெரிவித்துள்ளார். அதனுடைய நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக இருந்தாலும் பல மொபைல் ஆப்-களில் கூகுள் மேப் பயன்படுத்தப்படுவதாகவும் ஸ்வர்ணா சுப்பாராவ் கூறியுள்ளார். ஆனால் சர்வே ஆப் இந்தியா மூலமாக வெளியிடப்படும் மேப்-கள் சரியாகவும் துள்ளியமாகவும் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். கூகுள் மேப்-களில் வழிகளை தேடுவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து சர்வேயர் ஜெனரல் கூறியுள்ள கருத்து மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.