டெக்

அதிநவீன ஏவுகணையான ‘அக்னி-P’ சோதனை வெற்றி

EllusamyKarthik

இந்த ஏவுகணை ஒடிஷாவின் பாலசோர் கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டது.

இந்தியாவின் அதிநவீன புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி - P, வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை படைத்த இந்த ஏவுகணை ஒடிஷாவின் பாலசோர் கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்டது. 

அக்னி -P ஏவுகணை, திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை இரட்டை வழிகாட்டுதல் அமைப்புடன் கூடிய திட உந்துசக்தி ஏவுகணையாகும். இந்த இரண்டாவது சோதனையானது கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களின் நம்பகமான செயல்திறனை நிரூபித்திருப்பதாகவும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.