பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 5ஜி தொலைத்தொடர்பு சேவையை உலக அளவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜியோவின் வருகைக்கு பிறகு பல்வேறு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரிய வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. சில நிறுவனங்கள் மட்டும் அதற்கு போட்டியாக அடிக்கடி ஆஃபர்கள் அறிவித்து தன்னை நிலைநிறுத்தி வருகின்றன. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ஜியோவிடம் போட்டிபோட்டு அதனை பின்னுக்கு தள்ளும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம், 5ஜி சேவை தொடங்க உள்ளதாக கடந்த வருடமே செய்திகள் வெளியானது. நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக, 5ஜி தொழில்நுட்பம் குறித்து கோரியண்ட் நிறுவனத்தின் ஆலோசனையையும் பிஎஸ்என்எல் பெற்றது. மேலும் லார்சன் அண்ட் டூப் மற்றும் ஹெச்பி நிறுவனங்களிடம் பிஎஸ்என்எல் இதற்கான பேச்சுவார்த்தையை நடத்தியது.
இந்நிலையில், உலக அளவில் பிஎஸ்என்எல் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மை ஜெனரல் மேனேஜர் அனில் ஜெயின் சாய் கூறியுள்ளார். மொபைல் டிவைஸ் மாநாட்டில் பேசிய அவர், 3ஜி, 4ஜி சேவைகளை விட அதிவேக 5 ஜி சேவையில் பயணிக்கலாம் என்று கூறினார்.