டெக்

விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாய்ந்த ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்

webteam

அமெரிக்காவிலிருந்து 4 வீரர்களுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் விண்ணில் மிதக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை, அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து வடிவமைத்துள்ளன. அங்கு ஆய்வு செய்வதற்காக நாசாவின் விண்வெளி வீரர்கள் சென்று வருகின்றனர். ரஷ்யாவின் விண்கலம் மூலம் அந்நாட்டியிலிருந்து விண்வெளி வீரர்களை நாசா அனுப்பி வந்த நிலையில், பயணக் கட்டணத்தை குறைக்கும் விதமாக எலன் மஸ்க் என்பவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி அந்நிறுவனம் உருவாக்கியுள்ள Falcon 9 ராக்கெட், கடந்த ஜூன் மாதம் 2 விண்வெளி வீரர்களை விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டு மீண்டும் பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வந்தது. இதையடுத்து, முதன்முறையாக வணிக ரீதியான பயணத்தை நாசா தொடங்கியுள்ளது. புளோரிடாவில் உள்ள கென்னடி ஏவுதளத்திலிருந்து 4 வீரர்களுடன் FALCON 9 ராக்கெட், அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சுமார் 27 மணி நேரத்தில் இந்த ராக்கெட், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடையும். ராக்கெட்டில் சென்றுள்ள 4 வீரர்களும் 6 மாதத்திற்கு விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.