டெக்

நாசாவை பின்னுக்குத் தள்ளுமா ஸ்பேஸ் எக்ஸ்?

நாசாவை பின்னுக்குத் தள்ளுமா ஸ்பேஸ் எக்ஸ்?

webteam

இந்தியாவில் தயாரிக்கப்படும் செயற்கைகோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் செயற்கை கோள்களையும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் செலுத்தி சாதனை படைத்துவருகிறது, இஸ்ரோ. இதன்படி, இன்னும் ஏழு ஆண்டுகளில் (2024-ம் ஆண்டில்) விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதனை அனுப்ப, இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இதைப் பின்னுக்கு தள்ளி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்ல திட்டமிட்டுள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், சந்திரனுக்கு மனிதர்களை அழைத்து செல்வதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் இதுவரை நாசாவுக்குத் தேவையான விண்கலங்களைத் தயாரித்து வழங்கி வந்தது. இந்நிலையில், பூமியிலிருந்து 384,400 கிலோ மீட்டர் தூரம் உள்ள சந்திரனுக்கு 2018 ஆம் ஆண்டு இரண்டு மனிதர்களை அழைத்து செல்லவுள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். நாசா உதவி இல்லாமல் இதை செய்ய முடியாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த சோதனை வெற்றி பெற்றால், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக இது அமையும். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் கன ராக்கெட் மூலம் இதை நிகழ்த்தவுள்ளனர். இதுவரை பல பயணங்களை வெற்றிகரமாக்கிய டிராகன் 2 விண்கலமும் இதற்குப் பயன்படுத்தப்படவுள்ளது.

கடைசியாக, அமெரிக்க விண்வெளி வீரரான எயூஜின் கெர்னான், 1972-ம் ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்று, ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.