சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு தேவையான பொருள்களுடன் SpaceX நிறுவனத்தின் FALCON ராக்கெட் விண்ணுக்குப் பறந்து சென்றது.
மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட்டின் முதல் பகுதி, திட்டமிட்டபடி அருகேயிருந்த ஏவுதளத்தில் தரையிறங்கியது. பொருள்களுடன் கூடிய விண்கலம் தொடர்ந்து பயணம் செய்து புவியின் தாழ்நிலை வட்டப்பாதையை அடைந்தது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருள்களைக் கொண்டு செல்வதற்கு SPACEX நிறுவனத்துடன் அமெரிக்காவின் நாசா அமைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது.