டெக்

டேட்டா சிக்கனத்திற்கு சிக்கென்று சில யோசனைகள்

டேட்டா சிக்கனத்திற்கு சிக்கென்று சில யோசனைகள்

Rasus

ஐ போன் பயன்படுத்துபவரா நீங்கள்..? போனில் டேட்டா உடனடியாக காலியாகி விடுகிறது என்கிற கவலையும் இருக்கிறதா..? இனி கவலை வேண்டாம். சில டிப்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களின் மொபைல் டேட்டா உடனடியாக குறைவதை தடுக்க முடியும். என்னென்ன செய்யலாம்..?

•வைஃபை அசிஸ்ட்டை ஆஃப் செய்யுங்கள்

ஐஓஎஸ் 9 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டபோது, அதன் பயனாளர்கள் அனைவரும் கூறிய பெரிய புகார் மொபைல் டேட்டா அதிகமாக செல்கிறது என்பது தான். ஐஓஎஸ்-ல் உள்ள வைஃபை அசிஸ்ட் வசதி, வைஃபை சிக்னல் மோசமாக இருந்தால் அதுவாகவே மொபைல் டேட்டாவிற்கு மாறிவிடும். நீங்கள் வைஃபை-யை தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் அது மொபைல் டேட்டாவாக இருக்கும். செட்டிங்கில் சென்று வைஃபை அசிஸ்ட்டை ஆஃப் செய்வதன் மூலம் இந்த பிரச்னையை தீர்க்கலாம்.

•டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

பொதுவாகவே தங்களுக்கு விருப்பமான பாடல்களையோ, படங்களையோ மீண்டும் மீண்டும் பார்க்கும் பழக்கத்தை சிலர் வைத்திருப்பார்கள். அவ்வாறானாவர்கள், கையில் மொபைல் டேட்டா இருக்கும் போது, உடனடியாக ஆன்லைனில் சென்று பார்க்க கூடும். அவ்வாறு இல்லாமல், மறுபடியும் பார்க்கலாம் என நினைத்தால் அதனை ஒருமுறை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளுங்கள். எனவே ஆஃப் லைனிலும் அதனை காண முடியும். இதனால உங்களின் மொபைல் டேட்டா மிச்சமாகும்

• ஆப்பிள் நிறுவனம் வழங்கி வரும் ஐடியூன் சேவையில், பல்வேறு மொழிகளிலான பாடல்கள் கிடைக்கப்பெறுகின்றன. உங்களுக்கு பாடல்கள் தேவைப்படும் போது மட்டுமே ஐடியூனை பயன்படுத்துங்கள். மற்ற நேரங்களில் அதனை ஆஃப் செய்து வைத்துவிடுங்கள். இதனால் உங்களின் மொபைல் டேட்டா மிச்சமாகும்.

• உங்களுக்கு தினசரி எண்ணற்ற மின்னஞ்சல்கள் வரலாம். இதனை ஒவ்வொரு முறையும் நோட்டிபிகேஷனாக காமிக்கிறது ஆப்பிள் மொபைல். இது கூட உங்களின் மொபைல் டேட்டாவை அதிகரிக்கும். எனவே, செட்டிங்> அக்கவுண்ட்ஸ்> ஃபெட்ச்> நியூ டேட்டா சென்று புஷ் நோட்டிபிகிஷேனை ஆஃப் செய்து வைத்துவிடுங்கள்.

*உங்களுக்கான மொபைல் டேட்டா எவ்வளவு, உங்களால் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதன் மூலம் நீங்களே மொபைல் டேட்டா பயன்பாட்டை குறைப்பீர்கள். ஐ போனில் செட்டிங்> மொபைல் டேட்டா யூஸ் சென்று உங்களது டேட்டா பயன்பாட்டை அறிந்து கொள்ள முடியும். இதன்மூலம் உங்களது டேட்டா பயன்பாட்டை நீங்களே குறைத்துக்கொள்ளலாம்.