உலகில் ஐஃபோன் அதிக விலை நாடுகளில் துருக்கி முதலிடம் பிடித்துள்ளது; அங்கு விலை 2,592 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 2.47 லட்சம் ரூபாய். பிரேசில், எகிப்து, ஹங்கேரி, நார்வே ஆகியவை அடுத்த இடங்களில் உள்ளன. இந்தியா 24ஆவது இடத்தில் 1.36 லட்சம் ரூபாயுடன், அமெரிக்கா 39ஆவது இடத்தில் 1.12 லட்சம் ரூபாயுடன் உள்ளது.
உலகிலேயே துருக்கியில்தான் ஐஃபோனின் விலை அதிகம். இங்கே ஐஃபோனின் விலை 2,592 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசிலில் ஐஃபோனில் விலை இந்திய மதிப்பில் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்.
ஐஃபோன் விலை ஒரு லட்சத்து 78 ஆயிரம் ரூபாயாக உள்ள எகிப்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
நான்காவது இடத்தில் இருக்கும் ஹங்கேரியில் ஐஃபோனின் விலை ஒரு லட்சத்து 74ஆயிரம் ரூபாய் ஆகும்.
ஐந்தாவது இடத்தில் இருக்கும் நார்வேயில் ஐஃபோனின் விலை ஒரு லட்சத்து 60,000 ரூபாய் ஆகும்.
24ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் ஐஃபோனின் விலை ஒரு லட்சத்து 36ஆயிரம் ரூபாய் . 39ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவில் ஐஃபோனின் விலை ஒரு லட்சத்து 12ஆயிரம் ரூபாய் ஆகும்.