Type C
Type C amazon
ஸ்மார்ட்ஃபோன்

APPLE EVENT 2023 | பணிந்தது ஆப்பிள்... இனி ஐஃபோனிலும் டைப் சி..!

Viyan

ஐஃபோன் தன் புதிய மாடல்களான 15, 15 Pro மொபைல்களை நேற்று வெளியிட்டது. அந்த மொபலைகளின் சிறப்பம்சங்களைக் கடந்து பேசு பொருளாகியிருப்பது டைப் சி சார்ஜர் தான்.

APPLE EVENT 2023

ஆம், ஆண்டிராய்டு மொபைல்களில் முதலில் அறிமுகமான டூயல் சிம், டூயல் கேமரா போன்றவை சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்பிள் ஐஃபோனிலும் தென்பட்டாலும், ஆப்பிளுக்கும் ஆண்டிராய்டுக்குமான முக்கிய வேறுபாடாக தற்போது வரை இருப்பது லைட்னிங் சார்ஜர் தான். சார்ஜர் பின்களில் எத்தனை வகை இருந்தாலும் சின்ன பின் சார்ஜர், USB 2.0 சார்ஜர் போன்றவை பல பட்ஜெட் மொபலைகளில் இருந்து வந்தன. அதன்பின்னர் ஒன் பிளஸ் போன்ற நிறுவனங்கள் டைப் சி பின் சார்ஜரை அறிமுகம் செய்தன. பட்ஜெட்ஜ் ஆணடிராய்டு மொபைல்களில் அப்போதைய ஒரே தேர்வாக இருந்தது USB 2.0 சார்ஜர் தான். அதிவேக சார்ஜிங், வேகமாக டேட்டாவைக் கடத்துவது போன்றவற்றுக்கு இந்த சார்ஜர் ஏதுவாக இருந்தது. ஆனால், ஆப்பிள் மட்டும் லைட்னிங் மாடலையே பயன்படுத்திவந்தது.

2020களுக்குப் பின்னர் வரும் ஆப்பிள் லேப்டாப்களில் டைப் சி சார்ஜரை ஆப்பிள் கொண்டுவந்தாலும், மொபைலுக்கு மட்டும் லைட்னிங் தான். காரணம், பெரிதாக ஒன்றும் இல்லை. தனித்து தெரிய வேண்டும் என்பதுதான். அப்படியெல்லாம் ஒரு அவசியமும் தேவையில்லை என கடந்த சில ஆண்டுகளாகவே முட்டுக்கட்டை போட்டுவந்தது ஐரோப்பிய யூனியன்.

பணத்தையும், E கழிவுகளையும் மிச்சத்தப்படுத்த எல்லா கேட்ஜட்களுக்கும் ஒரே மாதிரியான சார்ஜர்கள் இருக்க வேண்டும் என கட்டளையிட்டது ஐரோப்பிய யூனியன். அதற்கென காலக் கெடுவும் விதித்தது. " லைட்னிங் சார்ஜர் TYPE C சார்ஜரை விட பல மடங்கும் பாதுகாப்பானது என்றெல்லாம் ஆப்பிள் சொல்லியும், பரவாயில்லை TYPE Cக்கு மாறிடுங்க என தான் எடுத்த முடிவில் நிலையாக இருந்தது ஐரோப்பிய யூனியன்.

அதனால், நேற்று வெளியான ஐஃபோன் 15, ஐஃபோன் 15PRO இரண்டும் மாடல்களையும் டைப் சி சார்ஜருடன் அறிமுக செய்திருக்கிறது. ஆப்பிள் மொபலைகளின் மார்க்கெட் வீழ்ச்சியும், ஆப்பிள் பணிந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. மற்ற சிறப்பம்சங்களை ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் பட்டியலிட்டாலும் மொத்த இணையத்தின் பேசுபொருள் டைப் சி சார்ஜர் தான்.

அடுத்து அப்படியே எல்லா ஸ்மார்ட்வாட்சுக்கும் ஒரே சார்ஜர் கொண்டு வர சொல்லி சட்டம் போடுங்க ஐரோப்பிய யூனியன்.