டெக்

ஒரே வாரத்தில் இத்தனை ஸ்மார்ட்போன்கள் அறிமுகமா! களை கட்டும் இந்திய சந்தை

EllusamyKarthik

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வரும் வாரம் கொஞ்சம் பிஸியான வாரம் என சொல்லலாம். நாளை தொடங்கி வரும் 24-ஆம் தேதி வரையில் குறைந்தபட்சம் நான்கு போன்கள் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ, விவோ மற்றும் ரியல்மி மாதிரியான நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

விவோ நிறுவனம் வி23E ஸ்மார்ட்போனை நாளை அறிமுகம் செய்ய உள்ளது. இதே போல ஒப்போ நிறுவனம் Find X சீரிஸில் Find X5 போனை 24-ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அதே நாளில் ரியல்மி நிறுவனம் Narzo 50 போனை அறிமுகம் செய்கிறது. 

சாம்சங் நிறுவனம் கேலக்சி டேப் S8 சீரிஸ் டேப்லட்களை அறிமுகம் செய்ய உள்ளது.