டெக்

தகவல்களை வழங்கும் ஸ்மார்ட் ஷூ!

தகவல்களை வழங்கும் ஸ்மார்ட் ஷூ!

webteam

தலை முதல் கால் வரை அனைத்தும் ஸ்மார்ட் ஆகி வரும் இந்த காலத்தில் காலணிகளையும் ஸ்மார்ட்டாக வடிவமைத்துள்ளனர்.
புகழ்பெற்ற காலணி வடிவமைப்பு நிறுவனமான டிஜிட் சோல், இந்த காலணிகளை வடிவமைத்துள்ளது. இக்காலணி, தானாகவே காலுக்கு ஏற்றார் போல் இறுக்கமாகிக் கொள்ளும். வேகம் மற்றும் காலடிகளின் எண்ணிக்கையை ட்ராக் செய்யக் கூடியதாகவும் இருக்குமாம். அதுமட்டுமின்றி, நாம் எவ்வளவு அடி நடக்கிறோம், எவ்வளவு வேகத்தில் நடக்கிறோம், மாடிப்படிகளில் நடக்கும் போது எத்தனை படிகளை கடக்கிறோம் போன்ற பல தகவல்களை வழங்குமாம். அதுமட்டுமின்றி தேவைக்கு ஏற்ற வகையில் பாதத்திற்கு குளிர் மற்றும் சூட்டை வழங்கக் கூடியதாகவும் காணப்படுகிறது. தற்போது கிக் ஸ்டார் தளத்தில் இக்காலணி பற்றிய விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.