டெக்

விரைவில் சந்தைக்கு வரப்போகும் பறக்கும் கார்!

விரைவில் சந்தைக்கு வரப்போகும் பறக்கும் கார்!

webteam

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலஜி நிறுவனம் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது

ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. இதில் 5 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம் என்றும், மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 454 கிலோ எடைக்கொண்ட இந்தப் பறக்கும் கார் ஹெலிகாப்டர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

வான்வழியாக பறக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் செல்லவும், ஆம்புலன்ஸ் போன்ற துரித சேவைகளுக்கும் இந்த காரை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த கார் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கார் வடிவமைப்பார்கள் தெரிவித்துள்ளனர். 

சில அனுமதிகளை அதிகாரப்பூர்வமாக வாங்க வேண்டுமென்றும், அதன்பிறகு விரைவில் பறக்கும் கார் சந்தைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.