டெக்

செயற்கையாக உருவாக்கப்படும் கல்லீரல்கள்!

செயற்கையாக உருவாக்கப்படும் கல்லீரல்கள்!

webteam

மனித உடல் உறுப்புகளை செயற்கையான முறையில் ஆய்வுகூடங்களில் உருவாக்கும் முயற்சியில் ஆய்வாளர்கள் களமிறங்கியுள்ளனர். 

உடலிலுள்ள மிகப் பெரிய உறுப்பு கல்லீரல். பொதுவாக மது அருந்துபவர்கள் கல்லீரல் பாதிப்புக்கு அதிகம் உட்படுத்தப்படுகின்றனர். மேலும் பல காரணங்களால் ஈரல் தொற்று ஏற்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 17,000 ஈரல் பாதிக்கப்பட்டவர்கள் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது கல்லீரலினை செயற்கையாக உருவாக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு குழந்தை கல்லீரல் (Baby Liver) என பெயரிட்டுள்ளனர். இந்த ஆய்வில், ஆய்வாளர்கள் மனித உயிரணுக்களில் இருந்து உயிரணுக்களை எடுத்து பயன்படுத்தியிருக்கின்றனர்.

ஈரலை செயற்கையாக உருவாக்குவது தொடர்பாக 2011 ஆம் ஆண்டு சங்கீதா பாட்டியா என்பவர் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே தற்போது ஆய்வுகூடத்தில் செயற்கை கல்லீரல் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த சோதனை வெற்றி பெருமானால் நாள்பட்ட கல்லீரல் பிரச்சினைகள் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி செயற்கையாக இயங்ககூடிய இதயம் ஒன்று உருவாக்கப்பட்டது குறிப்பிடதக்கது.