டெக்

சாம்சங் கேலக்ஸி S21 FE 5G இந்திய சந்தையில் அறிமுகம்; ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்

EllusamyKarthik

கொரிய நாட்டு ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான சாம்சங், கேலக்ஸி S21 FE 5G போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 2022-இன் முதல் அறிமுகமாக தங்கள் நிறுவனத்தின் சார்பில் இந்த போனை வெளியிட்டுள்ளது சாம்சங். நான்கு வண்ணங்களில் இந்த போன் வெளியாகி உள்ளது. 

6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி+டைனமிக் AMOLED டிஸ்பிளே, டிரிபிள் கேமரா, 5nm Exynos 2100 சிப்செட், 4500 mAh பேட்டரி, வயர்லெஸ் பவர் ஷேர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் 2.0, 25W சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெஸிஸ்டன்ட், ஸ்லிம் மாடலாக இந்த போன் வெளியாகி உள்ளது. 

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ள போனின் விலை ரூ.49,999, 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வேரியண்ட் உள்ள போனின் விலை ரூ.53,999. அறிமுக சலுகையாக ஆஃபர் விலையில் இந்த போன் கிடைக்கிறது. ஜனவரி 11 முதல் 17-ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த ஆஃபர் செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.