டெக்

சாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்..!

சாம்சங் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ இந்தியாவில் வெளியீடு - விலை மற்றும் சிறப்பம்சங்கள்..!

webteam

சாம்சங் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் சந்தையில் முன்னணி செல்போன் நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் திகழ்கிறது. மற்ற நிறுவனங்களை போன்று, சந்தையில் இருக்கும் விற்பனை போட்டிக்கேற்ப இந்நிறுவனமும் பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் ‘கேலக்ஸி எஸ்10 லைட்’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. 8 ஜிபி ரேம் மற்றும் ஸ்நாப் ட்ராகன் 855 எஸ்.ஓ.சி கொண்டது. விரைவில் சார்ஜ் செய்யக்கூடிய மற்றும் 2 நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் விதத்திலான 4,500 எம்ஏஎச் பேட்டரி இதில் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொறுத்தவரையில் 128 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டிருக்கிறது.

அத்துடன் கூடுதலாக மைக்ரோ சிப் மூலம் 1 டிபி வரை இந்த ஸ்மார்ட்போனில் அதிகரித்துக்கொள்ளலாம். கைரேகை கொண்ட இந்த போனின் எடை 186 கிராம் ஆகும். மேலும் இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.39,999 என அறிவிக்கப்பட்டுள்ளது.