டெக்

இருட்டிலும் படம் பிடிக்கும் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

இருட்டிலும் படம் பிடிக்கும் சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ்

webteam

குறைந்த வெளிச்சத்திலும் தெளிவாக படமெடுக்கும் கேமராவுடன் சந்தைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி ஆன் மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

சாம்சங் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரூ.16,900 விலையில் கேலக்ஸி ஆன் மேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சம் கேமராதான். பின்னாள், முன்னாள் உள்ள இரு கேமராக்களும் 16 மெகாபிக்சல் கொண்டது. வெளிச்சம் குறைவான மாலை நேரங்களிலும் கூட மிகச் சிறப்பாக படம் பிடிக்க முடியும். கேமராவின் ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் ஷட்டர் மிகத் தெளிவாக படம் பிடிக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி ஆன் மேக்ஸ் சிறப்பம்சங்கள்:
கேமரா முன்/பின்: 16 மெகாபிசல்
ரேம்: 4ஜிபி
தொடுதிரை: 5.7 இன்ச், ஃபுல் எச்டி, 2.5டி கர்வ்டு டிஸ்ப்லே
பேட்டரி: 3,300 mAH
ஸ்டோரேஜ்: 32 ஜிபி இண்டெர்னல் மெமரி, 256 ஜிபி வரை மிமரிகார்ட் மூலம் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டு 7.2 நாகெட் ஓஎஸ்.
இந்த ஸ்மார்ட்போனை பிலிப்கார்ட் ஆன்லைன்-ல் வாங்கிக் கொள்ளலாம்.